#BREAKING: கைதி விக்னேஷ் கொலை – மேலும் 4 காவலர்கள் அதிரடி கைது!
விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்கள் கைது.
சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் மேலும் 4 காவலர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, தலைமை செயலக காவல் நிலைய தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை காவலர், ஆயுதப்படை காவலர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல் நிலைய எழுத்தர் முனாப், காவலர் பவுன்ராஜ் ஏற்கனவே கைதான நிலையில், மேலும் 4 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக நேற்று காலை முதல் காவலர்களிடம் விசாரணை நடந்த நிலையில், சிபிசிஐடி கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி கஞ்சா வழக்கில் கைதான விக்னேஷ் காவல் நிலையத்தில் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. காவலர்களை கைது செய்யுமாறு தேசிய பட்டியலினத்தோர் நல ஆணையம் தமிழக காவல்துறை பரிந்துரைத்திருத்து என்பது குறிப்பிடத்தக்கது.