ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என மதுரைக் கிளை உத்தரவு.
திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவர் ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாக களக்காடு காவல்துறையால் கைது செய்யப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறையில் அடைக்கப்பட்டார். பின் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி மற்றொரு வழக்கில் நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அங்கு சக கைதிகளால் தாக்கப்பட்ட முத்து மனோ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. சிறையில் நடந்த மோதலில் இறந்த கைதி முத்து மனோ உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையில், இரண்டு கோடி ரூபாய் இழப்பீடு, நீதித்துறை விசாரணை நடத்தக்கோரி முத்து மனோ தந்தை பாபநாசம் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், ஜூலை 2-ம் தேதி மதியம் 3 மணிக்குள் கைதி முத்து மனோ உடலை உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். உடலை பெறாவிட்டால் ஜூலை 2-ம் தேதி இரவு 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகமே இறுதி சடங்கு நடத்தி முடிக்கலாம் என மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டபின் கோரிக்கை குறித்து நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…