ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு.
ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாக 4 மாதங்களுக்கு திறக்க நேற்று முதல்வர் தலைமையிலான நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்தோடு முடிவு எடுத்து திறப்பதற்கான 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ப்ராமணபத்திரம் பத்திர தாக்கல் செய்துள்ளது.
இதனையடுத்து, ஸ்டெர்லைடில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்குவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆக்சிஜனை தவிர வேறு எந்த அலகுகளையும் ஸ்டெர்லைட் இயக்கக்கூடாது என்றும் ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கை எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்வாதம் தெரிவித்த மத்திய அரசு, ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை எங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும். ஒப்படைக்கும் ஆக்சிஜனை நாங்கள்தான் மாநிலங்களுக்கு பிரித்து கொடுப்போம். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் தட்டுப்பாட்டை பொறுத்து ஆக்சிஜனை பிரித்தளிப்போம் என கூறியுள்ளது. அரசின் கண்காணிப்பின் கீழ் ஸ்டெர்லைட் ஆலை இயக்கம், நிர்வாகம் இருக்கலாம் என நீதிபதி சந்திர சூட் கூறியுள்ளார்.
மேலும், கண்காணிப்பு குழுவில் உள்ளூர் மக்களை சேர்க்கும் தமிழக அரசின் முடிவுக்கு ஸ்டெர்லைட் நிர்வாகம், மத்திய அரசும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஸ்டெர்லைட்டை கண்காணிக்கும் குழுவை அமைப்பது தொடர்பாக நீதிமன்றமே ஆணையிடலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆக்சிஜனை மத்திய அரசு மூலம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என ஏற்கனவே ஒரு உத்தரவு உள்ளதே என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகதிக்ரு முன்னுரிமை வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க 5 பேர் கொண்ட நிபுணர் குழுவையும் அமைத்து, தேசிய சுற்றுசூழல் பொறியியல் ஆய்வு மையம் 5 நிபுணர்களை தேர்வு செய்யும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசிடம் ஆலோசித்து உள்ளூர் மக்களில் 2பேரை குழுவில் சேர்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஆக்சிஜனை மத்திய தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்து, குறிப்பாக, ஆக்சிஜன் உற்பத்திக்கான அனுமதி, வேதாந்தாவின் வேறு எந்த ஆதாயத்திற்காகவும் இது கிடையாது என நீதிபதிகள் விளக்கமளித்தனர்.
தேவைப்படும் ஆக்சிஜன் குறித்து சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. உற்பத்தியாகும் ஆக்சிஜனை மத்திய அரசே பிரித்துக்கொடுக்கும் எனவும் கூறியுள்ளது. ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கு முன்னுரிமை வளாக முடியாது, அளவை மத்திய அரசே முடிவு செய்யும் என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை…
ராஜஸ்தான் : கடந்த 2016, 2020 ஆகிய ஆண்டுகளில் இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன்…
சென்னை :அசத்தலான சுவையில் கிறிஸ்மஸ் ஸ்பெஷல் கல்கல் ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்: ரவை -50…
பிரேசில் : தெற்கு பிரேசிலின் கிராமடோ நகரத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறிய ரக விமானம் விபத்தானத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்த நிலையில்,…
கடலூர் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனியார் செய்தி நிறுவனத்திடம் பேட்டியளிக்கையில், 2026 சட்டமன்ற…
சென்னை : தேர்தலின் போது வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை இனி பொதுமக்கள் பார்வையிட முடியாதபடி, தேர்தல் விதிகளை…