#BREAKING : வணக்கம் எனக் கூறி தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி..!
தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது என பிரதமர் மோடி பேச்சு.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவை தொடங்கி வைத்த பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றி வருகிறார். பிரதமர் அவர்கள், வணக்கம் எனக் கூறி தமிழில் கூறி, விருந்தோம்பி என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி தனது உரையை தொடங்கினார்.
அப்போது பேசிய அவர், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை மிகவும் குறுகிய காலத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது. தமிழ்நாட்டில் இது நடப்பது நம் நாட்டுக்கே பெருமை. தமிழகத்திற்கும் சதுரங்க விளையாட்டிற்கும் நீண்ட வரலாற்று தொடர்பு உள்ளது. தமிழகத்தில் இருந்து பல கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். இந்தியாவின் விளையாட்டு கலாச்சாரம் மேம்பட்டு உள்ளது.
கிராமங்கள், நகரங்களில் உள்ள நமது வீரர்கள் வெற்றிகளை ஈட்டும் காலகட்டம் இது. தமிழ்நாட்டின் கோயில்களில் உள்ள சிற்பங்கள் பல்வேறு விளையாட்டுகளை குறிக்கும் விதமாக அமைந்துள்ளது. துடிப்பான கலாச்சாரம் கொண்ட தமிழகம் தமிழ் மொழியின் தாயகமாகும் என தெரிவித்துள்ளார்.