#BREAKING : தமிழர் பாரம்பரிய உடையில் விழா அரங்கிற்குள் வந்தடைந்தார் பிரதமர் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நடைபெறும் அரங்கிற்குள் வந்தடைந்தார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் நடைபெற்று வருகிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி, பட்டு சட்டையுடன் வந்திருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு வழி நெடுகிலும் பாரம்பரிய கலை நிகழ்வுடன் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழர் பாரம்பரிய உடையுடன் விழா நடைபெறும் அரங்கிற்குள் வந்தடைந்தார். விழா அரங்கிற்குள் வந்தடைந்த பிரதமர் மோடி அவர்கள் அனைவரையும் பார்த்து கையசைத்தார்.
பின் தமிழ்த்தாய் மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே ஆரம்பமானது. அதனை தொடர்ந்து, பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் உள்ளிட்டோரை வரவேற்று அமைச்சர் மெய்யானாதன் வரவேற்புரை வழங்கினார்.