#BREAKING: கிருமி நாசினி உள்ளிட்ட 15 பொருட்களுக்கு விலை நிர்ணயம்-தமிழக அரசு உத்தரவு..!
- கிருமி நாசினி,முகக்கவசம் உள்ளிட்ட 15 பொருள்கள் அத்தியாவசியப் பொருள்கள் என்று தமிழக அரசு அறிவிப்பு.
- இந்த 15 பொருள்களுக்கும் அதிகபட்சமாக விற்கவேண்டிய விலையை தமிழக அரசு நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் பயன்படுத்த கூடிய கிருமிநாசினி, முககவசம் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அதற்கான ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கிருமிநாசினி, முககவசம் உள்ளிட்ட 15 பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான விலை நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
- கிருமிநாசினி 200 மில்லி லிட்டர் ரூ.110
- N95 முககவசம் ரூ.22
- கையுறை ரூ.15
- பிபி இ கிட் ரூ.273க்கும் விற்கலாம் .
- இரண்டு அடுக்கு முககவசம் விலை ரூ.3, இரண்டு அடுக்கு முககவசத்தின் அதிகபட்ச விலை ரூ.4 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஒரு முறை பயன்படுத்தப்படும் ஏப்ரானின் அதிகபட்ச விலை ரூ.12
- அறுவை சிகிச்சை நிபுணர்கள் அணியும் கவுனின் அதிகபட்ச விலை ரூ.65 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது