சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வருகிற ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர். இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தற்போது சென்னைக்கு வரும் 6ம் தேதி வருவது உறுதியானது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழகம் வந்தடைந்துள்ளார். தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மசினகுடிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தடைந்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வருகை முன்னிட்டு மசினக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஐந்து மாவட்டங்களில் உள்ள 1000த்திற்கு மேற்பட்ட காவல்த்துறையினர் பாதுகாப்பிற்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, அங்கு தாயை பிரிந்த யானை குட்டிகள் ரகு, பொம்மி அவற்றை பராமரித்துவரும் பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி தம்பதியையும் குடியரசு தலைவர் சந்திக்க உள்ளார்.
தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின மாதிரி கிராமத்தையும் குடியரசுத் தலைவர் பார்வையிடவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிறகு ஆகஸ்ட் 6ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 165-வது பட்டமளிப்பு விழாவிலும் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
பின் மாலை 7 மணிக்கு ஆளுநர் மாளிகை தர்பார் அரங்குக்கு ‘பாரதியார் அரங்கம்’ என்று பெயர் சூட்டும் விழாவில் பங்கேற்கிறார். அதன்பின் குடியரசு தலைவருக்கு ஆளுநர் மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுவதாவும், இந்த விருந்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…