#BREAKING: முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் – 3 மணி வரை 52.40% வாக்குகள் பதிவு!

Default Image

விழுப்புரம் மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 61.04 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என மாநில தேர்தல் ஆணையம் தகவல்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்று வரும் முதற்கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.40% வாக்குகள் பதிவாகி உள்ளது என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராணிப்பேட்டையில் 49.70%, வேலூர் 52.32%, தென்காசி 55.29%, செங்கல்பட்டு 46.30%, கள்ளக்குறிச்சி 53.27%, திருப்பத்தூர் 41.24%, விழுப்புரம் 61.04% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. திருவெண்னைய் நல்லூரில் 60%, முகையூர் 54.01%, செஞ்சி 59.28%, விக்கிரவாண்டி 59.95%, கண்டமங்கலம் 62.50%, ஒலக்கூர் 69.97%, வானூர் 65.06% என மொத்தமாக 61.04 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்