மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் சமீப நாட்களாக நிலவிவரும் மின்வெட்டு தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது. கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது. கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கோடைகாலத்தில் மின் தேவை அதிகரித்துள்ளது.
நிலக்கரியை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். தினமும் 17,100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில், 13,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. வெளிமாநிலத்தில் இருந்து மின்சாரத்தை கொண்டுவர கடந்த ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார். மின்வெட்டு காரணமாக விவசாயிகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனத்தினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், சத்தீஸ்கரிலிருந்து தமிழ்நாடு வரை மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசு முறையாக மின்சாரத்தை பெறவில்லை. மின்சாரம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இரவில் மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படும் நிலை பல இடங்களில் காணப்படுகின்றது. தடையில்லா மின்சாரம் கொடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளது இந்த அரசு? கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…