தேர்தல் ஆணையம் குறித்து கே.என் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனாவால் பாதித்தவர்கள் தபால் மூலம் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, திமுக முதன்மைச் செயலாளர் கே.என் நேரு தபாலில் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை தர கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது தேர்தல் ஆணையம் சார்பில் மார்ச் 29-ம் தேதிக்குள் அந்த பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி தொகுதிவாரியாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை மார்ச் 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில், தபால் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை அரசியல் கட்சியினருக்கு தராமல் 5 மாவட்டங்களில் நேரடியாக வாக்காளர்களுக்கு வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால், தபாலில் வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டோரின் பட்டியலை இதுவரை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என கூறி தேர்தல் ஆணையம் குறித்து கே.என் நேரு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…