#BREAKING : பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு – அரசாணை வெளியீடு
மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், வருகிற 2022-ம் ஆண்டு தைப் பொங்கலுக்கு அரிசி குடும்ப (ரேசன்) அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கும் பச்சரிசி, முந்திரி திராட்சை உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, இத்தொகுப்பில்,பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி வெல்லம், முந்திரி,திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள்தூள் மிளகாய் தூள், மல்லித்தூள். கடுகு சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு. உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2,15,48,060 குடும்பங்களுக்கு, மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. #pongal2022 #tamilnadugovt pic.twitter.com/9xDuVfT9Qp
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) November 20, 2021