#BREAKING: பொங்கல் பரிசு – புதிய சுற்றறிக்கை அனுப்பிய கூட்டுறவு சங்கம்!

மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றியிருந்த ரொக்கத் தொகை என்ற வார்த்தை நீக்கம்.
2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்க தமிழக அரசு அறிவித்திருந்தது.
பொங்கல் தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் வழங்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜன.3-ம் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று, பொங்கல் சிறப்பு தொகுப்புடன் ரொக்கத்தொகை ஆகியவை நியாயவிலை கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரருக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
இதன்பின், தமிழக அரசின் பொங்கல் சிறப்பு தொகுப்பானது ஜன.3-ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படவுள்ள நிலையில், அதனுடன் ரொக்க தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவியது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், நேற்று மண்டல பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கம் அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றியிருந்த ரொக்கத் தொகை என்ற வார்த்தையை நீக்கம் செய்து இன்று புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தகுபு வழங்குவது குறித்து நேற்று வெளியிடப்பட்டியிருந்த சுற்றறிக்கையில் தவறாக ரொக்கம் என்ற வார்த்தை இடம்பெற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025