#BREAKING: பொங்கல் பரிசாக ரூ.1000 – முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை!
பொங்கலுக்கு ரூ.1,000 மற்றும் சில பொருட்கள் வழங்கலாமா? என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை.
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கான பரிசு தொகுப்பை வழங்குவது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு பங்கேற்றுள்ளனர். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது குறித்தும், பொங்கலுக்கு ரேஷனில் 1,000 ரூபாயுடன் என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது பற்றியும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
குறிப்பாக, பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் பொருட்களாக வழங்கலாமா? அல்லது பணம் வழங்கலாமா? எனபது குறித்தும் ஆலோசித்து வருகின்றனர். கடந்த பொங்கலின்போது பொருட்களின் தரம் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில், இந்தமுறை பணமாக வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே, பொங்கல் பரிசாக ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்குவதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது.