தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனால் கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைப்பெற்று வருகிறது.
இந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். முதல் கட்ட தேர்தலை விட இரண்டாம் கட்ட தேர்தல் அதிக பதவிக்கு தேர்தல் நடைபெறுவதால் வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடி மையங்கள், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் 15-வது வார்டில் வேட்பாளர்களது சின்னங்கள் இடம் மாறியிருப்பதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. ஒரத்தநாடு ஒன்றியம் 15-வது வார்டில் உள்ள 8 மையங்களில் அதிமுக , திமுக சின்னங்கள் மாறி இருந்ததால் வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…