#BREAKING: புதுச்சேரியில் அரசியல் குழப்பம் – ராகுல் காந்தி ஆலோசனை.!
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெருமான்மை இல்லாத சூழலில், முதல்வர் நாராயணசாமியுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
புதுச்சேரியில் அடுத்தடுத்து நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் மொத்தம் 30 இடங்களில் 19 காங்கிரஸ் கூட்டணி இருந்த நிலையில், தற்போது 14 ஆக குறைந்து, ஆட்சி நீடுக்கமா என்று குழப்பம் நிலவி வருகிறது. புதுச்சேரி சட்டசபையில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு 14 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, புதுச்சேரி அரசியல் சூழல் குறித்து, விமான நிலையத்தில் முதல்வர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். காங்கிரஸ் அரசுக்கு பெருமான்மை இல்லாத சூழலில் முதல்வர் நாராயணசாமியுடன் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, புதுச்சேரி முத்தயா பேட்டையில் மீனவ மக்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடி வருகிறார்.