#BREAKING : இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு போலீஸ் சம்மன்…!

Published by
லீனா

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ராயபேட்டை காவல்நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடந்த 11-ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகம் அருகே இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனிடையே,அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்களுடன் அத்துமீறி நுழைந்ததாக இபிஎஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இதனால்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களை கைது செய்தனர்.

இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு ராயபேட்டை காவல்நிலைய போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். நாளை ஓபிஸ் ஆதரவாளர்களும், நாளை மறுநாள் இபிஎஸ் ஆதரவளர்களும் ராயபேட்டை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

31 minutes ago

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

59 minutes ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

1 hour ago

திருப்பதியில் கூட்ட நெரிசல் விவகாரம் : பவன் கல்யாண் தீட்சை செய்வாரா? – ரோஜா கேள்வி!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…

3 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

ஈரோடு :  காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…

3 hours ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு! சீமான் மீது வழக்குப்பதிவு!

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…

3 hours ago