#Breaking : விஷச்சாராய வழக்கு – விசாரணை அதிகாரிகள் நியமனம்..!

investigation

விழுப்புரம், செங்கல்பட்டு விஷசாராய வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து இதுவரை 22 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், விஷச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் ஆர்.என் ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

இந்த நிலையில், விஷச்சாராயம் குடித்து 22 பேர் மரணமடைய காரணமான விஷச்சாராயம் விற்பனை செய்த ஆலை அதிபர் இளையநம்பி, பரக்கத்துல்லா, ஏழுமலை மற்றும் 13 பேர் மீதான வழக்குகள் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம், செங்கல்பட்டு விஷசாராய வழக்குகளில் விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்குகள் சிபிசிஐடி மாற்றப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எக்கியார்  குப்பத்தில் 14 பேர் இறந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு சித்தாமூரில் 8 பேர் உயிரிழந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். விஷசாராய தொடர்பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் இன்று தொடங்குகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்