#BREAKING: குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

Default Image

எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் விதமாக குழந்தை எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர்கள் பங்கேற்று பேசி வருகின்றனர். இதில் பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக, குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்க 18 வயதுக்கு உட்பட்ட எழுத்தாளர்களுக்கு கவிமணி விருது வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்து ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழ் உடன் கவிமணி விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த ஆட்சியர்கள், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது ஆண்டுதோறும் தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்