குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி.
சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவிற்கு தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டு வேஷ்டி , பட்டு சட்டையுடன் வந்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கார்த்தி, கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இவ்விழாவில் கண்ணை கவரும் மணல் ஓவியங்களை வரைந்து சாகசம் புரிந்தார் ஓவியர் சர்வம் படேல். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பல்வேறு நாட்டு செஸ் அணியின் கேப்டன்கள் கொடியுடன் அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் பொடியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர். ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளம் வரும் பிரதமர், அங்கிருந்து கார் மூலம் விழா நடக்கும் நேரு ஸ்டேடியம் வருகிறார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…