#Breaking:சமஸ்கிருதத்தில் உறுதிமொழி சர்ச்சை – மாவட்ட ஆட்சியர் விசாரணை!

Published by
Edison

மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.அப்போது வழக்கமான ஹிப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது.

இதனையடுத்து,சமஸ்கிருத உறுதிமொழி ஏற்றது தொடர்பாக விளக்கமளிக்கு கல்லூரி முதல்வர் ரத்னவேல் அவர்கள் விளக்கமளிக்க மருத்துவ கல்லூரி இயக்குநரகம் உத்தரவிட்டது.அதன்பின்னர்,தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதள பக்கத்தில் ஆங்கிலத்தில், சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்த உறுதிமொழியை  மாணவர் சங்க பொதுச்செயலாளர் ஒருவர் தவறுதலாக பதிவிறக்கம் செய்து விட்டதாகவும்,மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டால் சம்மந்தப்பட்ட மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து,மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில்,மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் விசாரணை மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படுகிறது..அதன்படி,மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல் உள்ளிட்ட நான்கு பேரிடம் விசாரணை நடத்துகிறார்.

இதனிடையே,செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவக்கல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஷ் குமாரவேல்,உறுதி மொழியின்போது சமஸ்கிருதத்தை ஆங்கிலத்தில் எழுதியே வாசித்தோம்,மாறாக சமஸ்கிருதத்தில் படிக்கவில்லை.கடைசி 2 நாட்களில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்ததால்,அவசரத்தில் இப்படி நிகழ்ந்து விட்டது”,என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

“என்னால் பிரச்னை வேண்டாம் என நினைக்கிறேன்” – துரை வைகோ.!

சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…

9 minutes ago

மிரட்டல் நாயகன் பட்லர் தொட்டதெல்லாம் தூள்.., டெல்லியை வீழ்த்தி குஜராத் மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…

42 minutes ago

ராஜஸ்தான் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் தேர்வு.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…

1 hour ago

இந்தி பெயரில் பாட நூல் வெளியான விவகாரம் – NCERT கொடுத்த விளக்கம்.!

சென்னை : நேஷனல் கவுன்சில் ஆஃப் எஜுகேஷனல் ரிசர்ச் அண்ட் ட்ரெய்னிங் (NCERT) அமைப்பு, இந்தியாவில் பள்ளிக் கல்விக்கான பாடநூல்களை…

2 hours ago

குஜராத்தை துவம்சம் செய்த டெல்லி! இது தான் டார்கெட்!

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…

2 hours ago

துரை வைகோ பதவி விலகல்: “நாளை சுமூகத் தீர்வு எட்டப்படும்” – மதிமுக பொருளாளர்.!

சென்னை : மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகுவதாக அறிவித்துள்ளார். அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள மல்லை…

3 hours ago