#BREAKING : சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்பு – முதல்வருக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கடிதம்..!
மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கடிதம்
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன்,பி.மூர்த்தி,மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர்,கல்லூரி முதல்வர் ரத்னவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது வழக்கமான உறுதிமொழிக்கு பதிலாக மாணவர்கள் சமஸ்கிருதத்தில் மகரிஷி சரம் சப்த் உறுதிமொழி ஏற்றது பெரும் சர்ச்சையானது. இதனையடுத்து, மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதி மொழி ஏற்ற விவகாரத்தில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்பார் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளனர்.
அந்த கடிதத்தில், தேசிய மருத்துவ ஆணையத்தின் சுற்றறிக்கையின்படி ‘வைட் கோட் செர்மனி, சரக் ஸபத் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தேசிய மருத்துவ ஆணைய சுற்றறிக்கை குறித்து அறிவுறுத்தல் எதுவும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வரவில்லை. சரக் சபத் போன்றவை குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், மருத்துவர்களுக்கு மாறுபட்ட கருத்து உள்ளது. மத்திய, மாநில அரசுகளிடம் அறிவுறுத்தல் வராததால் வைட் கோட் செர்மனி போன்றவை நடத்தப்பட்டது. மதுரையில் நடந்த நிகழ்வில் சரக் சப்பாத்தி உறுதிமொழி ஆங்கிலத்தில்தான் எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.