#BREAKING: நெகிழி பொருள் தயாரிப்பு -தகவல் கொடுத்தால் பரிசு..!
தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி தரப்படும்.
தடைசெய்யப்பட்ட நெகிழி பொருள்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பற்றி தகவல் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி கைவிடப்படும் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி பயன்பாட்டுக்கு 2018 ஆம் ஆண்டு ஜூன் 25ம் தேதி முதல் தடை உள்ளது.
பிளாஸ்டிக்பை, பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டு, தர்மாகோல் கப்பு, பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. உணவுப் பொருள்கள் கட்ட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்றவை தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது
தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றங்கள், பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அண்மையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நெகிழி பொருள்களில் அடைப்பு காரணமாக கூறப்பட்ட நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த அறிவிப்பு அறிவித்துள்ளது. நெகிழிப் பொருள் உற்பத்தி பற்றி தெரிந்தால் https://tnpcb.gov.in/contact/php என்கிற இணையதளத்தில் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களுக்கு பாராட்டும், உரிய வெகுமதியும் வழங்கப்படும் என மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.