தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அந்த வகையில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனையடுத்து,திமுக ஆட்சியை பிடித்த நிலையில்,குடும்ப தலைவிக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை நிதி நெருக்கடி காரணமாக செயல்படுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,அதிமுக , பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் திமுக தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், திமுக தேர்தலுக்காக கொடுத்த வெற்று வாக்குறுதி இது என்றும் கூறி தமிழக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கேஎன் நேரு தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் முறைப்படி அறிவிப்பார் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும்,இதுகுறித்து அமைச்சர் கேஎன் நேரு கூறுகையில்:”தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.இத்திட்டம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் முறைப்படி அறிவிப்பார்”,என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசிய அமைச்சர்,”அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலை சரியான முறையில் நடத்தினார்களா?; தற்போது நடைபெற்றதை விட நேர்மையாக தேர்தலை நடத்த முடியாது”, என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…