#Breaking : தருமபுரியில் பரிதாபம்.! மின்சாரம் தாக்கி 3 பேர் பலி.!
தருமபுரி சந்தைப்பேட்டை அருகேஇரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை இறக்கியபோது மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு.
தருமபுரி சந்தைப்பேட்டை அருகே இலியாஸ் என்பவர் வாடகை வீட்டில் குடியிருந்த நிலையில், தனது வீட்டை காலி செய்வதற்காக இரண்டாவது மாடியில் இருந்து இரும்பு பீரோவை இறக்கியபோது பீரோவில் மின்கம்பில் உரசியதால் மின்சாரம் தாக்கி உள்ளது.
மின்சாரம் தாக்கியதில், பச்சையப்பன், இலியாஸ், கோபி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய படுகாயம் அடைந்த குமார் என்பவர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கம்பி உரசியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.