#BREAKING: கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியது.!
கீழடி 7-ஆம் கட்ட அகழாய்வு பணியை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழக தொல்லியல்துறை சார்பில் கீழடியில் 6-ஆம் கட்ட அகழ்வாராட்சி பணி முடிவடைந்த நிலையில், இன்று 7-ஆம் கட்ட அகழாய்வு பணி தொடங்கியுள்ளது. இதனை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய நான்கு இடங்களில் 7-ஆம் கட்ட அகழாய்வு பணி நடக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.