#Breaking:ரூ.105-ஐ தாண்டிய பெட்ரோல் விலை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
Today Price:
பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன.
இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து ரூ.95.33-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 7 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.3.78 ஆகவும் , டீசல் விலையில் ரூ.3.90 ஆகவும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய விலை உயர்வின் மூலம் இந்தியாவிலேயே அதிகப்படியான விலையில் பெட்ரோல் விற்பனை செய்யும் நகரமாக மும்பை உள்ளது.31 காசுகள் அதிகரித்து ₹114.18 ஆக விற்பனை செய்யப்படுகிறது.