#BREAKING: எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிய கோரி மனு!
கட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவே அவை ஓபிஎஸ் வாகனத்தில் வைக்கப்பட்டதாக மனுவில் தகவல்.
எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வன்முறையில் ஈடுபட்ட ஈபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி ஓ.பி.எஸ் ஆதரவாளர் ஜே.சி.டி.பிரபாகர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவுக்கு செப்டம்பர் 19-க்குள் பதிலளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு மாவட்ட செயலாளர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகார் அளித்துள்ளார். தங்களை தாக்கியவர்கள் மீது வழக்கு பதியாமல் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை மீது குற்றசாட்டியுள்ளார். மேலும், கட்சி அலுவலகத்தில் உள்ள ஆவணங்களை பாதுகாக்கவே அவை ஓபிஎஸ் வாகனத்தில் வைக்கப்பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.