10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா வாபஸ் பெற்றார்.
சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும் +1 தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவித்தார்.
அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல, 34, 842 மாணவர்கள் பேருந்து வசதிஇல்லாமல் கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாமல் போனது. அதனால், அந்த +2 மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.
+2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27-ம் தேதி தொடங்கப்படும். மேலும் தேர்வு எழுதுள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கு செய்து தரப்படும். இதனால், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா மனுவை வாபஸ் பெற்றார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…