#BREAKING :10-ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தடையில்லை.! ரத்து செய்ய கோரிய மனு வாபஸ்.!

Default Image

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை  வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா வாபஸ் பெற்றார்.

சமீபத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார். அப்போது, கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மற்றும்  +1 தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவித்தார்.

அதன்படி, 10-ம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1-ம் தேதி முதல் 12-ம் தேதி வரையும், + 1 வகுப்பு ஒத்தி வைக்கப்பட்ட  தேர்வு ஜூன் 2-ம் தேதியில் நடத்தப்படும். அதேபோல, 34, 842 மாணவர்கள் பேருந்து  வசதிஇல்லாமல் கடந்த மார்ச்  24-ம் தேதி  தேர்வு எழுத முடியாமல் போனது. அதனால், அந்த  +2 மாணவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவித்தார்.

+2  தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 27-ம் தேதி தொடங்கப்படும். மேலும் தேர்வு எழுதுள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுக்கு செய்து தரப்படும். இதனால், பெற்றோர் அச்சப்பட தேவையில்லை என  அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்கள், பெற்றோர் யாரும் வழக்கு தொடராத நிலையில் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை எப்படி ஏற்க முடியும்?  என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில், வழக்கறிஞர் ஸ்டாலின் ராஜா மனுவை வாபஸ் பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்