#BREAKING: ஈரோடு இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தேர்தல் முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வேறு ஒரு வழக்கில் இதுதொடர்பாக ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, மனு நிராகரித்து தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.