#BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிரான மனு தள்ளுபடி!
ஆதாயம் தரும் இரட்டை பதவியை ஆளுநர் ரவி வகிப்பதாக கண்ணதாசன் என்பவர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.
தமிழக ஆளுநர் ஆர்என் ரவியை தகுதி நீக்கம் செய்யகோரிய மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இரட்டை பதவி வகிப்பதாக ஆளுநர் ரவிக்கு எதிராக தபெதிக தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட தபெதிக தலைவர் கண்ணதாசன் தொடர்ந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவரோ, ஆளுநர்களோ நீதிமன்றங்களுக்கு பதில் சொல்ல கட்டுப்பட்டவர்கள் அல்ல என உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பினை சுட்டிக்காட்டி சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆளுநர் ரவி, ஆரோவில் அறக்கட்டளை தலைவராகவும் பதவி வகிப்பதால் தகுதி நீக்கம் செய்ய மனுதாரர் கோரியிருந்தார்.