#BREAKING : நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்க அனுமதி.! அரசு அறிவிப்பு.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இன்றுடன் ஊரடங்கு நிறைவடைய இருந்தநிலையில் பிரதமர் மோடி இன்று காலை மக்களிடம் உரையாற்றும் போது ஊரடங்கு மேலும் 19 நாள்கள் நீட்டிக்கப்பட்டு மே 3-ம் தேதி வரை ஊரடங்கு இருக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் நாட்டுப்படகுகள், இயந்திரம் பொருத்திய நாட்டுப்படகுகள் தொடர்ந்து மீன்பிடிக்கலாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படகு உரிமையாளர்கள் கொரோனா தடுக்க முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணத்தை தரவேண்டும் . மீன்பிடி துறைமுகம் , மீன்பிடி இறங்குதளம் ,கடற்கரை பகுதியில் மீன்களை பொது ஏலம் மூலம் விற்கக்கூடாது.
மீன் இறங்குதல் , சந்தைக்கு கொண்டு செல்லுதல் போன்ற பணிகளுக்கு குறைந்த ஆட்களை பயன்படுத்த வேண்டும். என்றும் ஆட்சியர் தலைமையிலான குழு எந்த நாளில் , எத்தனை படகுகளில் மீன்பிடிக்க செல்லலாம் என முடிவு செய்யும் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் தற்போதைய ஊரடங்கு காலம் மீன் பிடி தடைக் காலமாக கருதி விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபட அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.