தமிழகத்தில் ஆக- 10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி .
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் மத்திய அரசு 3 கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் மற்றும்
பயிற்சியாளர்கள் நல சங்கத்தின் (Tamil Nadu Gym Owners & Trainerswelfare Association) சார்பில் அதன் நிர்வாகிகள், தமிழ்நாட்டில் உள்ளஉடற்பயிற்சியகங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அக்கோரிக்கையினை பரிசீலித்த முதலமைச்சர்
மத்திய அரசு தனியார் உடற்பயிற்சிக் கூடங்களை திறக்க ஆகஸ்ட் 5 தேதி முதல் அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் தனியார் உடற்பயிற்சி கூடங்கள் (stand alone only), 50 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய வாடிக்கையாளர்களுடன் 10.8.2020 முதல் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும், இதற்கான நிலையான வழிகாட்டு செயல் முறைகள் (Standard Operation Procedure) தனியாக வெளியிடப்படும். அவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…