தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவிப்பு.
தமிழகத்தில் முழு ஊரடங்கான நாளை திருமண விழாவிற்கு செல்ல அனுமதி வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக நாளை முழு ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில், திருமண விழாவிற்கு செல்ல இருப்பவர்கள் திருமண அழைப்பிதழ் பத்திரிகையை காண்பித்து தங்கள் பயணங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் ஊரடங்கு நாளான நாளை திருமணத்திற்கு செல்பவர்கள் அழைப்பிதழ் காண்பித்து பயணம் செய்யலாம். திருமண மண்டபத்தில் 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
முழு ஊரடங்கு நாட்களில் நடைபெறும் திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. ஏற்கனவே நாளை அரசு தேர்வுகள் எழுத செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது திருமண விழாவிற்கு செல்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…