#BREAKING: பள்ளியளவில் காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ள அனுமதி – பள்ளிக்கல்வித்துறை
தமிழகம் முழுவதும் பள்ளியளவில் காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி.
தமிழகம் முழுவதும் பள்ளியளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாளைக் கொண்டு தேர்வு நடத்தப்படும் போது, வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறையை அறிவித்துள்ளது. தேர்வு தேதிகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களே முடிவு செய்துகொள்ளவும் பள்ளிக்காலத்துறை உத்தரவிட்டுள்ளது.
செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டுத் தேர்வை எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது. நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.