#BREAKING: அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி.!
அரசியல், சமுதாயம், பொழுதுபோக்கு சார்ந்த கூடங்களுக்கு டிசம்பர் 1 முதல் 8ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
கடந்த 28 ஆம் தேதி டிசம்பர் மாத ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, தமிழகத்தில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சம் 50 சதவிகித இருக்கைகள் அல்லது அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல் பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் வருகின்ற 1 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடத்த அனுமதிக்கப்படுகிறது.
இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம் வரும் நாட்களில் நோய் தொற்றின் நிலவரத்திற்கு ஏற்ப, திறந்த வெளியில் கூட்டங்கள் நடத்த தளர்வுகள் அளிப்பது பற்றி உரிய முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.