#Breaking : தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி மறுப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ஆம் தேதி முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அணைத்து சுற்றுலாத் தளங்களும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புதிதாக லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
இதனை அடுத்து கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வருகிற 10 ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல், 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 14 நாட்களும் மாநிலம் முழுவதும் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து சுற்றுலா தளங்கள் மற்றும் பூங்காக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.