#BREAKING: 6 பூச்சி கொல்லிகளுக்கு நிரந்தர தடை.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!
ஏற்கனவே 60 நாட்களுக்கு தற்காலிகத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதிப்பு.
அபாயகரமான 6 பூச்சிக் கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 60 நாட்களுக்கு தற்காலிகத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்தது தமிழ்நாடு அரசு. தற்கொலைக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில் அபாயகரமான 6 பூச்சி கொல்லி மருந்துகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மோனோகுரோட்டோபாஸ், ப்ரோஃபெனோபாஸ், அசிபேட், குளோர்பைரிஃபாஸ் ஆகிய பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், சைபர்மெத்ரின், ப்ரோஃபெனோபாஸ் சைபர்மெத்ரின் உள்ளிட்ட பூச்சிக் கொல்லிகளுக்கும் நிரந்தர தடை விதிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.