முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய முதல்வர், சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி, சமூகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார். அவர் எழுதிய எழுத்துக்கள், பேசிய பேச்சுக்கள், யாரும் எழுத, பேச பயந்தவை என தெரிவித்துள்ளார்.
மேலும், பெரியாரின் செயல்கள் குறித்து பேசவேண்டுமென்றால் 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு தான் பேச வேண்டும். இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம். பெரியாரின் குருகுல பயிற்சி தான் திமுகவை உருவாக்கியது. செப்.17 சமூக நீதி நாளன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும் என்றும், பெரியார் குறித்த இந்த அறிவிப்பை வெளியிடுவது எண்ணி தான் பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…