பெரியார் ஆய்வகம் மற்றும் பயிலகமான பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிலையில், பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலக கட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி சிறுகனுரில் 27 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.
பெரியாரின் சுயமரியாதையை பிரச்சாரப்படுத்தும் விதமாக அமைக்கப்பட உள்ளது. பெரிய உலகம் அமைக்கப்படும் இடத்தில 95 அடி உயரத்தில் பெரியாரின் வெண்கல சிலையும், அதற்கு கீழ 60 அடிக்கு பீடம் ஒன்று என மொத்தம் 155 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரியாரின் வரலாற்றை விலகும் வகையில் ஒளி, ஒலி காட்சிகளுடன் கூடிய அருகாட்சியகம் மற்றும் மெழுகு சிலை அரங்கமும் இங்கு அமைக்கப்பட உள்ளன.
கண்காட்சி, கேளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய மிகப்பெரிய பூங்காவாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 27 ஏக்கரில் 9 ஏக்கருக்கு மட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர் பாபு, எ.வே.வேலு மற்றும் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…
சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…
சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…