#BREAKING: திருச்சியில் “பெரியார் உலகம்” – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்

Default Image

பெரியார் ஆய்வகம் மற்றும் பயிலகமான பெரியார் உலகத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

பெரியாரின் 144-வது பிறந்தநாளையொட்டி சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் சமூகநீதி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பெரியாரின் 144-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சிறுகனுரில் பெரியார் உலகம் என்ற பெயரில் ஆய்வகம், பெரியார் பயிலக கட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி சிறுகனுரில் 27 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் இருந்து காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார்.

பெரியாரின் சுயமரியாதையை பிரச்சாரப்படுத்தும் விதமாக அமைக்கப்பட உள்ளது. பெரிய உலகம் அமைக்கப்படும் இடத்தில 95 அடி உயரத்தில் பெரியாரின் வெண்கல சிலையும், அதற்கு கீழ 60 அடிக்கு பீடம் ஒன்று என மொத்தம் 155 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பெரியாரின் வரலாற்றை விலகும் வகையில் ஒளி, ஒலி காட்சிகளுடன் கூடிய அருகாட்சியகம் மற்றும் மெழுகு சிலை அரங்கமும் இங்கு அமைக்கப்பட உள்ளன.

கண்காட்சி, கேளரங்கம், பெரியார் படிப்பகம், குழந்தைகளுக்கான விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் கூடிய மிகப்பெரிய பூங்காவாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 27 ஏக்கரில் 9 ஏக்கருக்கு மட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது, அமைச்சர்கள் கேஎன் நேரு, சேகர் பாபு, எ.வே.வேலு மற்றும் திராவிட கழகத்தின் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்