#BREAKING : பேச்சுவார்த்தைக்கு பின் சிறுவனின் உடலை பெற்றுக் கொண்ட பெற்றோர்..!

பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின் சிறுவன் தீக்சித் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை காவல் ஆணையர் மீனா விசாரணை நடத்திய நிலையில், தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, இன்றைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தனியார் பள்ளிக்கு மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், முதல்வர் தனலட்சுமி, வாகன பொறுப்பாளர் ஞானசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளை காவல்துறை கைப்பற்றியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், சிறுவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல்கூறாய்வு செய்யப்பட்டதையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் தனது ஒரே மகனை பறிகொடுத்த இருப்பதாகவும், பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று சிறுவனின் தாய் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின், தற்போது சிறுவனின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025