#BREAKING: பண்ருட்டி ராமசந்திரன் நீக்கம் – ஈபிஎஸ் அதிரடி அறிவிப்பு
அதிமுகவில் இருந்து பண்ருட்டி ராமசந்திரன் நீக்கம் செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.
அதிமுகவின் அமைப்பு செயலாளராக பண்ருட்டி ராமசந்திரனை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் சற்று முன் அறிவித்திருந்தார். ஓபிஎஸ் வெளியிட்டிருந்த அறிக்கையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமசந்திரன் (கழக அமைப்பு செயலாளர்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஈபிஎஸ் எதிரான கருத்துக்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அதிமுகவின் அரசியல் ஆலோசகராக பண்ருட்டி ராமசந்திரனை நியமித்திருந்தார் ஓபிஎஸ். இந்த நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உளப்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் பண்ருட்டி ராமசந்திரன் நீக்கப்படுவதாக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், பண்ருட்டி S. ராமச்சந்திரன் கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் திரு. @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/wiefvEziEH
— AIADMK (@AIADMKOfficial) September 27, 2022