கோவில்பட்டி சிறையில் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கில் தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்து வருகிறது.இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, 2 எஸ்ஐகளை சஸ்பெண்ட் செய்துள்ளார். மேலும், இன்று தமிழகம் முழுவதும் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு கடையடைப்பு என தமிழ்நாடு வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைத்துறை ஏடிஜிபி சம்பவம் தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. அதில் வழக்கினை மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்து தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் தூத்துக்குடி எஸ்பி காணொளி காட்சி மூலம் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…
டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …