கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் ராஜகண்ணப்பன் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் 3,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ராஜகண்ணப்பன் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக சில குழப்பங்கள் ஏற்பட்டது. முதலில் தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட இருந்தநிலையில் பின்னர், அதனை நிறுத்திவிட்டு ப.சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இத்தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி முழுமையாக விசாரிக்கப்படவேண்டும் என கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கில் 11 ஆண்டுகளுக்கு பின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ராஜகண்ணப்பன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது. மேலும், ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…