#BREAKING: ஆதரவற்ற மகளிர் நலவாரியத்துக்கு அரசாணை வெளியீடு!
சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியதுடன் இணைப்பு.
தமிழகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிர் மகளிர் நல வாரியம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. மத்திய அரசின் உத்தரவுபடி சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியதுடன் இணைக்கப்படுகிறது. கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், முதிர்கன்னிகளின் பிரச்சனைகளை களைய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி உள்ளிட்ட திட்டங்களை வகுத்து பாதுகாப்பான சூழலை உருவாக்க நலவாரியம் அமைக்கப்பட்டுள்ளது. சமூகநலன், மகளிர் உரிமைத்துறை அமைச்சரவை தலைவராக கொண்ட வாரியம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்வதை உறுதி செய்யும் பொருட்டு கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் அமைக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.