#BREAKING: சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து! – உயர் நீதிமன்றம்
ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து.
கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். கருமுட்டை விவகாரத்தில் இராசு சுதா மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.
சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவில் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. விதிகளுக்கு முரணாக செயல்படுவதால் மருத்துவமனைக்கு சீல் வைத்ததற்கு காரணங்கள் கூறப்பட்டுள்ளன என தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். கரு முட்டை விவகாரத்தில் அபாயகர சூழல் ஏற்பட்டதை தனி நீதிபதி புறக்கணித்திருக்கக்கூடாது எனவும் கூறியுள்ளார்.