#BREAKING : தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய உத்தரவு..! – பள்ளிகல்வித்துறை
தமிழகம் முழுவதும் பள்ளி கட்டடங்களை ஆய்வு செய்ய பள்ளிகல்வித்துறை உத்தரவு.
நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த விஸ்வரஞ்சன், சதீஷ், அன்பழகன் ஆகிய 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா ரூ.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், உயிரிழந்த மாணவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க கூடிய முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பள்ளி கட்டங்களை ஆய்வு செய்து உறுதி தன்மை இல்லாத கட்டடங்களை இடிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.