#BREAKING : ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு..! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி..!

Published by
லீனா

புதுக்கோட்டையில் உள்ள 325 பள்ளி கட்டடங்களில் 100 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதால், பள்ளி கட்டடங்களை இடிக்க ஆட்சியர் உத்தரவு. 

நேற்று நெல்லையில் எஸ்.என்.ஹைரோட்டில் பொருட்காட்சி திடல் அருகே  உள்ள தனியார் பள்ளியான சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறை சுவர்  இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 4 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து, நெல்லை சாஃப்டர் பள்ளியின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமை ஆசிரியர் ஞான செல்வி மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கைதான பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி ஆகியோரை டிச.31 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நெல்லை மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கைதான தலைமை ஆசிரியருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில், மாவட்டத்தோறும் அங்கு இருக்க கூடிய முதன்மை கல்வி அதிகாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் சேர்ந்து குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நேற்று 38 மாவட்டங்களில், பள்ளி கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்ய 19 கல்வி அலுவலர்களை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அந்த வகையில், புதுக்கோட்டையில் உள்ள 325 பள்ளி கட்டடங்களில் 100 கட்டடங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  இதனையடுத்து, ஆபத்தான நிலையில் உள்ள 100 பள்ளி கட்டடங்களை இடிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் கவிதா ராமு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Recent Posts

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

தமிழ்நாட்டில்  22 மாவட்டங்களில் மிதமான மழை.! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…

17 mins ago

விறுவிறு வாக்குப்பதிவு : வயநாடு இடைத்தேர்தல், ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் தொடக்கம்.!

டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…

53 mins ago

தொடர் கனமழை : பெரம்பலூர், அரியலூரில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…

1 hour ago

கனமழை எதிரொலி : இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

சீனாவில் பரபரப்பு! கூட்டத்தில் காரை ஏற்றி 35 பேரை கொலை செய்த நபர்!

சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…

12 hours ago

“காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவடைய வாய்ப்பில்லை”…வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…

12 hours ago