#BREAKING : ஓபிஎஸ் மனைவி மறைவு…! கண்கலங்கிய ஓபிஎஸ்…! கையை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா….!

ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்த சசிகலா, ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.
இதனையடுத்து, ஓபிஎஸ் மனைவி விஜயலக்ஷ்மி மறைவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஈபிஸ் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தி, ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறினர். இந்நிலையில்,சசிகலா அவர்கள், ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க, அதிமுக கொடி கட்டிய காரில் வருகை தந்தார். மருத்துவமனைக்கு வந்த அவர், ஓபிஎஸ் கையை பிடித்து ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025